தமிழக செய்திகள்

மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது;

"ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு கூறியுள்ளது. அதனை பின்பற்றியே தமிழக முதல்-அமைச்சர் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்.

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். பள்ளிகளில் எந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்? அதில் யாரையெல்லாம் பேச அனுமதிக்கலாம்,  அதற்கு என்ன விதிமுறைகள் என்பதை வரையறுக்க மிக விரைவில் கமிட்டி அமைக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை