தமிழக செய்திகள்

குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு இன்று தொடங்குகிறது

குரூப்-1, 1ஏ பதவிகளில் 72 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் 70 காலிப்பணியிடங்களும், உதவி வனப்பாதுகாவலர் (குரூப்-1ஏ) பதவியில் 2 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 72 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை 1 லட்சத்து 81 ஆயிரத்து 422 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வெளியானது. தேர்வில் 1,865 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத்தேர்வை எழுத வேண்டும்.

அவர்களுக்கான முதன்மைத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதன்படி, தமிழ் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து குரூப்-1 பதவிகளுக்கு தாள்-2, தாள்-3, தாள்-4 தேர்வு முறையே 2, 3, 4-ந்தேதிகளிலும், குரூப்-1 ஏ பதவிகளுக்கு முறையே 8, 9, 10-ந்தேதிகளிலும் தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்காக சென்னையில் 19 மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை