தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இந்த ரெயில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20 மற்றும் 23-ந்தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (19-ம் தேதி) முதல் 24ம் தேதி வரை குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்