சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 03 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும்/முடிவடையும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
1. சென்னை கடற்கரை மும்பை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22158), 04 பிப்ரவரி 2026 முதல் 04 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்படும்.
2. சென்னை கடற்கரை ஐதராபாத் சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12759), 04 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.
3. ஐதராபாத் சென்னை கடற்கரை சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12760) , 03 பிப்ரவரி 2026 முதல் 04 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு வந்து சேரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.