தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் 27ம் தேதி மின்தடை

சென்னையில் 27ம் தேதி மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 27.1.2026, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்: கேனால் பேங்க் சாலை, கேன்சர் மருத்துவமனை, காந்திநகர், கேனால் கிராஸ் சாலை, விவேக்ஸ் ஷோரூம், கிரசென்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிப்பூ நகர், கருணாநிதி தெரு, பாண்டிச்சேரி சாலை, வரதாபுரம் லேக் வியூ சாலை, இந்திராநகர், காமராஜ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிஸ் ராமசாமி அவென்யூ, கஸ்தூரிபாய்நகர், இ.சி.ஆர். மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

வடபெரும்பாக்கம்: சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திர நகர், ஸ்ரீனிவாசாநகர், நடராஜ்நகர், 200 அடி சாலை, ஆதிநாத்நகர், இ.பி.எம். நதி, ஜி ஸ்கொயர், வள்ளி பார்க், ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை, எரிகரை, பாலாஜிநகர், ஓமக்குளமேடு, கில்பர்ன்நகர், ஆர்.ஆர்.நகர், சரங்கபாணிநகர், சண்முகசுந்தரம்நகர், சீதாபதி 1 முதல் 5வது தெரு வரை, எம்.ஆர்.எச். சாலை ஆகிய இடங்களில் மின்தடை செய்யபப்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.