தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (8.2.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர்: டி.ஐ. சைக்கிள் 3வது பிரதான சாலை மற்றும் 6 முதல் 9வது தெருக்கள் வரை.

அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: மகாத்மா காந்தி சாலை 4, 5, 6, 11 மற்றும் 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ரெயில்வே ஸ்டேஷன் சாலை 5, 6 மற்றும்7வது தெருக்கள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.