தமிழக செய்திகள்

பராமரிப்பு பணிகள்: சென்னை கடற்கரை - எழும்பூர் இரவு நேர மின்சார ரெயில்கள் நாளை ரத்து

சென்னை கடற்கரை, எழும்பூர் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை)இரவு 9:55, 10 :10, 10:40, 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10:30, 11:00, 11:20, 11:40, 11:59, மற்றும் 19-ம் தேதி அதிகாலை 3:55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து நாளை இரவு 10:10, 11:00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு10:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.  

திருமால்பூரில் இருந்து நாளை இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது." 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது