தமிழக செய்திகள்

போதிய மழை பெய்யாததால் கருகும் மக்காச்சோள பயிர்கள்

வேப்பந்தட்டை பகுதியில் போதிய மழை பெய்யாததால் கருகும் மக்காச்சோள பயிர்களால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக போதியளவில் மழை பெய்யாததால் மக்காச்சோள பயிர்கள் கருகி வருகின்றன. பல்வேறு இடங்களில் பூ வந்து கதிர் வராத நிலையில் வதங்கி காணப்படுகிறது. பெரும்பாலான வயல்களில் மக்காச்சோளம் வளர்ச்சி குன்றி சிறிய உயரத்திலேயே பூ வந்து உள்ளது. இதனால் மக்காச்சோளம் பயிர் முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை முழுமையாக சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து