தமிழக செய்திகள்

படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க வைத்து; தமிழ் குடியை அடியோடு ஒழிப்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க வைத்து; தமிழ் குடியை அடியோடு ஒழிப்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.

தினத்தந்தி

செனனை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தன்னலத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாசாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க வைத்து தமிழ் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வரும் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

இனியாவது மக்களை சுரண்டாமல், மடைமாற்றி விடும் பணியை செய்யாமல் மக்கள் பணியாற்ற முதல்-அமைச்சர் முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து கொசு ஒழிப்பு களப்பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்