தமிழக செய்திகள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்ற புள்ளி விவரங்களை தெரிவிக்கும் மத்திய அரசு, மக்கள் கொஞ்சம் வெளியே வரும்போது அவர்களின் அன்றாட தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஏற்றி உள்ளது.

போதாகுறைக்கு இங்கு இருக்கும் மாநில அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில்,கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என்று சொல்லி இப்போது மக்கள் மீது ஒரு பெரும் சுமையை தன் பங்கிற்கு ஏற்றியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டிப்பவர்கள் சொத்து வரி உயர்வை கண்டிப்பது இல்லை. அதே போல் சொத்து வரி உயர்வை கண்டிப்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை குறித்து மூச்சு விடுவதில்லை.

ஒரு சாமானியன் பக்கம் நின்று இரண்டையும் கண்டிக்கும் ஒரே கட்சியாக மக்கள் நீதி மய்யம் மட்டுமே உள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பும் கட்சியாகவும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே இருந்துவருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்