தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், ஜோஜூ ஜார்ஜ், உன்னி முகுந்தன், சில அரசியல் கட்சிகள் இணையத்தில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க வேண்டும் என்பது கண்டனத்துக்குரியது. இந்த அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் பறிபோகும்.
எனவே, முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை, தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.