தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழன் அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கம், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கம், காமராஜ் கல்லூரி இணைந்து மிஸ்டர் தமிழ்நாடு 2023 ஆணழகன் போட்டியை நடத்தியது. போட்டிகளை தொழிலதிபர் விநாயகமூர்த்தி, கல்லூரி செயலாளர் சோமு, டாக்டர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்கருக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் முருகானந்தம், மாரியப்பன், ராம்குமார், அரிராமகிருஷ்ணன், கிங்ஸ்டன், மகாலிங்கம், சங்க தலைவர் ராஜேஷ், செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் வைரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.