தமிழக செய்திகள்

திருத்தணி பஸ் நிலையத்தில் போக்குவரத்து ஊழியரை தாக்கியவர் கைது

திருத்தணி பஸ் நிலையத்தில் போக்குவரத்து ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 52). இவர் திருத்தணி அண்ணா பஸ் நிலையத்தில் நேரக் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பஸ் நிலையத்தில் ராமலிங்கம் பணியில் இருந்தபோது திருத்தணி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த வடிவேல் (47) என்பவர் ஒரு பஸ் கூட வரவில்லை என ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி, அலுவலகத்தில் இருந்த மைக் செட்டுகளை சேதப்படுத்தி, அங்கிருந்து நாற்காலியை எடுத்து ராமலிங்கத்தை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ராமலிங்கம் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் வடிவேலுவை கைது செய்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வடிவேலுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு