தமிழக செய்திகள்

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த நபர் கைது

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே, வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது அன்வர் அலி என்பவர், பண்ருட்டியை சேர்ந்த முருகன் உட்பட 14 பேரை, அர்மேனியா நாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களிடம் இருந்து 28 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால் கூறியபடி வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். விசாரணையை தெடர்ந்து அன்வர் அலியை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை