ஈரோடு,
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (37). இவர் ஈரோட்டில் கள்ளநோட்டு தயாரித்து விநியோகித்துள்ளார். இந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சதீஷை கைது செய்தனர்.