தமிழக செய்திகள்

18 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

நெல்லை சந்திப்பு, ஸ்ரீபுரம் பகுதியில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோலப்பன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபுரம் பகுதியில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோலப்பன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த அப்துல் மன்னான் மகன் அப்துல் சபூர் (வயது 36) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர் விற்பனைக்காக சுமார் 18 கிலோ எடையுடைய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்த சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்துல் சபூரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.