திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 7 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்த கண்ணபிரான்(எ) கந்தசாமி என்பவர் திருச்சி மாவட்டம், ஜீயர்புரம் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 1.11.2025 அன்று முதல் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார்.
மேற்சொன்ன ஜீயர்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக நீதிமன்ற பிணை பெற்ற நிலையில் திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்த காரணத்தினால் இன்று (6.11.2025) கடலூரில் வைத்து திருநெல்வேலி மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.