தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மதுப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மதுப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுப்பழக்கம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் துரையரசன் (வயது27). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் கூலி வேலை செய்து வந்தார்.

துரையரசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் துரையரசன் மனம் உடைந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் வீட்டிற்குள் உத்திரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று துரையரசன் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவருடைய தாயார் கவுரி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு