தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது38). தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (35). இவர்களுக்கு அபிநிதி (10) என்ற மகள் உள்ளார். பிரபு கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தகராறில் மன வேதனை அடைந்த பிரபு வீட்டில் இருந்த சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்