தமிழக செய்திகள்

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி(எ) கண்ணபிரான் (வயது 46) என்பவர் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரில் உள்ள பல பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்குகளில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் அவர், திருநெல்வேலி மாநகர பேலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், பேலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் ஒழுங்கு) தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று (22.11.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.  

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை