தமிழக செய்திகள்

சக்தி மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா

சக்தி மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.

தினத்தந்தி

கே.வி.குப்பத்தை அடுத்த மேல் காவனூர் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டல பூஜைகள் நடந்தன. 48 நாள் நிறைவடைந்த தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி பால்குட ஊர்வலம், கோ பூஜை, அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, மகா யாகம், நவகிரக ஹோமம், அம்மனுக்கு சீர்வரிசை, மகா தீபாராதனை, ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொய்கை மோட்டூரை சேர்ந்த வாராகிதாசர் சுவாமிகள், கண்ணமங்கலம் சிவ சித்தர் அம்மையார், அணைக்கட்டு விக்னேச சிவம் ஆகியோர் கலந்துகொண்டு மண்டலாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனர்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்