கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே, புயல் காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

மேலும் மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்கள் அறிவித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலை. நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்