தமிழக செய்திகள்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மாண்டஸ் புயல் எச்சரிக்கையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து கலெக்டர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறுகிறது. இந்த புயல் புதுச்சேரிக்கும்- சென்னைக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன, மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இடையில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இருப்பினும் குளிர்ந்த காற்று வீசியது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புயல் எச்சரிக்கை, கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டா ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்