தமிழக செய்திகள்

மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்புகலூர் ஊராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி சார்பில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி பிளாஸ்டிக் பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்