தமிழக செய்திகள்

நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் - வைகைச் செல்வன் தாக்கு

அதிமுக ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.

தினத்தந்தி

சென்னை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். இவர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து வந்தார். சமீப காலமாக கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் திடீரென வருகை தந்தார்.

பின்னர் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வரும் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர்களுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், அவரது நெருங்கிய கட்சி நிர்வாகி மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்த கிளைக் கட்சி போல அதிமுக செயல்படுவதாகவும் விமர்சித்தார்.மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பதை அதிமுக நிர்வாகி வைகை செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைகை செல்வன் இதுதொடர்பாக கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பான  முறையில் இயங்கி வருகிறது. மனோஜ் பாண்டியனை எம்.பியாக்கியவர் ஜெயலலிதா. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதெல்லாம் யாரால் வந்தது என்ற நன்றி மறந்து, பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன், என்று விமர்சித்தார். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்