தமிழக செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மன்சூர் அலிகான்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மன்சூர் அலிகானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்சூர் அலிகான் சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்