தமிழக செய்திகள்

தீவிர புயலாக மாறியது "மாண்டஸ்"

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல், தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக புயலாக உருமாறியது.

வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது.

சென்னையில் இருந்து 440 கி.மீ காரைக்காலில் இருந்து 350 கி.மீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. நாளை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கரையை கடக்கும். மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது. நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...