தமிழக செய்திகள்

மாரத்தான் போட்டி

அம்பையில் மாரத்தான் போட்டி நடந்தது

தினத்தந்தி

அம்பை:

நெல்லை மாவட்ட காவல்துறையின் போதை மற்றும் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அம்பையில் நடைபெற்றது. அம்பை தாலுகாவை சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் ஆண்கள், பெண்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான போட்டி அம்பை தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி, பஸ் நிலையம் முன்பு சென்று வடக்கு ரதவீதிவழியாக மீண்டும் மெயின் ரோடு வழியாக விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரதவீதியில் முடிந்தது.

பெண்களுக்கான போட்டி அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி மெயின்ரோடு விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரதவீதியில் முடிவடைந்தது. காலை 6.15 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி சூப்பிரண்டு பல்வீர் சிங் முன்னிலை வகித்தார். அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து