தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மாரத்தான் ஓட்டம்

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் மாவட்ட பொது சுகாதார பணிகள் துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தொடர் மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பொது சுகாதார துறையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இந்த போட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கச்சிராயப்பாளையம் ரோடு, காந்திரோடு, நான்குமுனை சந்திப்பு, துருகம்ரோடு வழியாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏ.கே.டி.தனியார் பள்ளி முன்பு முடிவடைந்தது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து