தமிழக செய்திகள்

அடுத்த 5 ஆண்டுக்கான செயல்திட்டத்தை இன்று அறிவிக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த நாளில், அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான அறிக்கையை அறிவிக்க இருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்

1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஸ்டாலின் அறிக்கை-ஐ அறிவிக்க இருக்கிறேன்!

திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.