தமிழக செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று தாமிர சபையில் நடராஜ பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சமேதராக வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதனையடுத்து நெல்லையப்பர் கோவில் திருக்கோவில் 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான், திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாலை நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்