சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.
இந்த நிலையில், அமமுகவுடன் மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் மருது சேனை சங்கம், கோகுல மக்கள் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
கோகுல மக்கள் கட்சிக்கு தளி தொகுதியும், மருதுசேனை சங்கத்திற்கு திருமங்கலம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.