தமிழக செய்திகள்

விருத்தாசலம், பண்ருட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி, 

விருத்தாசலம்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திரிபுராவில் நடந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி

இதேபோன்று, பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் உத்தராபதி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசு, உதயகுமார் ஆகியோர் போராட்டம் குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர குழு உறுப்பினர்கள் சங்கர், தினேஷ், முகமது நிஜார், ராஜேஷ்கண்ணா, மகாலட்சுமி, பாண்டுரங்கன், ராஜேந்திரன், வட்ட குழு உறுப்பினர்கள் லோகநாதன், பன்னீர், பகத்சிங், மணிவண்னன், விவசாய சங்க தலைவர்கள், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு