தமிழக செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

மணல்மேடு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

மணல்மேடு:

மணல்மேடு அருகே ஆனந்ததாண்டவபுரம் முதல் சேத்தூர் வரை செல்லும் 5 கி.மீட்டர் சாலையை சீரமைக்க வேண்டும். அரசு பஸ்சை சேத்தூர் மெயின் ரோடு வரை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல்மேடு-வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் மண்ணிப்பள்ளம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நீடித்தது. அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை நடுவில் தற்காலிகமாக அடுப்புகளை ஏற்படுத்தி சமையல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து, மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடுத்த மாதம் சாலைவசதி ஏற்படுத்தி தரப்படும். பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் சேவையை சேத்தூர் வரை நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறயில் போராட்டத்தை வைட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிகக்ப்பட்டது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்