தமிழக செய்திகள்

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கூட்டமாவு, வாவிளையை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 42), கொத்தனார். இவருக்கு செல்வி (34) என்ற மனைவியும் 2 பிள்ளைகள் உள்ளனர். பிரின்ஸ் தினமும் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த பிரின்சை, அவரது மனைவி செல்வி கண்டித்தார். இதனால், மனமுடைந்த பிரின்ஸ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைகாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிக்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...