தமிழக செய்திகள்

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

திருவட்டார் அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே கெத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் சாமிவிளையை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது58), கொத்தனார். இவருடய மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் தேவதாஸ் கடந்த சில ஆண்டுகளாக கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். தேவதாசுக்கும் அந்த பெண்ணுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தேவதாஸ் கொல்லிக்காட்டுவிளையில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு