தமிழக செய்திகள்

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை,

தக்கலை அருகே மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொத்தனார்

தக்கலை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் என்பவருடைய மகன் பெலிக்ஸ் (வயது 37), கொத்தனார். இவருக்கு மோனிஷா (35) என்ற மனைவியும், அக்லின் ஜெசி (7) என்ற மகனும் உள்ளனர். பெலிக்சுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால், பெலிக்ஸ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளார்.

இதேபோல் கடந்த வாரம் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மோனிஷா கணவரிடம் கோபித்துக்கொண்டு மகனுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக பெலிக்ஸ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்த பெலிக்ஸ் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலையில் பெலிக்சின் தாயார் விக்டோரியா அவரை எழுப்ப அறைக்கு சென்றார். அப்போது அங்கு பெலிக்ஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவி கோபித்துக்காண்டு தயார் வீட்டுக்கு சென்றதால் மனமுடந்த பெலிக்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெலிக்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு