கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மே 19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54-க்கும், டீசல் ரூ.88.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி பெட்ரோல் லிட்டர் 94.54 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 88.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு