தமிழக செய்திகள்

ரேசனில் மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி - தமிழக அரசு

குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் மே மாதத்திற்குரிய சேரன் பொருட்களில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரேசன் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு பருப்பு, பாமாயிலின் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி அந்த இரண்டு பொருட்களும் அரை மாதம் முடிந்தும் வழங்கப்படாமல் இருக்கிறது. இதன் எதிரொலியாக, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," சேரனில் மே மாதத்தில் விநியோகிப்பதற்காக 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.418.55 கோடி மதிப்பீட்டில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு, ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும். இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து