அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்த மாணவன் மாயமான்.
ராணிப்பேட்டை மாவட்டம் காரைக் கூட்ரோடு பகுதியில் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவன் தங்கி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன் மீண்டும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அரசு இல்ல ஊழியர்கள் பல்வேறு இடங்களில் மாணவனை தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து அரசு இல்லத்தின் காப்பாளர் (பொறுப்பு) கோமதி அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.