தமிழக செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அகற்றும் பணியை மேயர் ஆய்வு

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அகற்றும் பணியை மேயர் சுஜாதா ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

வேலூர் கொசப்பேட்டை கோலக்காரன் தெரு மற்றும் வேலப்பாடி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது.

சமீபத்தில் பெய்த மழையால் அந்த கால்வாயில் குப்பைகள் அடைத்து வீடுகளுக்குள் கழிவுநீர் சென்றது. இதுகுறித்து வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவுக்கு புகார் சென்றது. இந்த நிலையில் நேற்று அவர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். குப்பைகள் அகற்றும் பணியையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ''பொதுமக்கள் குப்பைகளை கழிவுநீர் கால்வாயில் கொட்ட வேண்டாம். இதனால் பல்வேறு இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே வீடுகளுக்கு குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை ஒப்படையுங்கள். சாலையிலும், கால்வாயிலும் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை வீடுகளுக்கு வந்து வாங்க வராவிட்டால் அதுகுறித்து எனக்கு புகார் தெரிவிக்கலாம்'' என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்