தமிழக செய்திகள்

எம்.பி.பி.எஸ் சீட் - வேறு ஒரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர்

வேறு ஒரு அரசுப் பள்ளி மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்யாமல் சிவப்பிரகாசம் திரும்பிச் சென்றார்.

தினத்தந்தி

சென்னை

தர்மபுரியைச் சேர்ந்த 61 வயதான சிவப்பிரகாசம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சிவப்பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சிலிங்கிற்காக வந்தார். சிவப்பிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இடஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249-வது இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''டாக்டராக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதினேன். வெற்றியும் பெற்றுள்ளேன் எனக்கூறியிருந்தார்.

இந்த நிலையில், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற சிவப்பிரகாசம், வேறு ஒரு அரசுப் பள்ளி மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்யாமல் திரும்பிச் சென்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்