தமிழக செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் நியமித்துள்ளார்.

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை இன்று நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை