தமிழக செய்திகள்

ம.தி.மு.க. தொடக்க விழா

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. தொடக்க விழா நடந்தது.

சங்கரன்கோவில்:

ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவிலில் நடந்த விழாவுக்கு மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வி.எஸ்.சுப்பாராஜ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார் வரவேற்று பேசினார்.

மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கட்சி கொடியேற்றினார். விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முஹம்மது ஹக்கீம், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய செயலாளர் சசி முருகன், நகரத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கசாமி, அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் சக்திகோமதிசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் பாசறை கணேசன், முன்னிலையில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் ராஜா, மெடிக்கல் கருப்பையா, ஜோதிராமலிங்கம், கருப்பையா, சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.