கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மதுரையில் இன்று தொடக்கம்

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மதுரை,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 3 மாத வயதிற்கு மேற்பட்ட கன்று, பசுக்களுக்கு நவ., 6 (இன்று) முதல் முகாம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுவதாக மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது; மதுரையில் 3 மாத வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 50 கன்று, பசுக்கள் உள்ளன. இந்த சீசனில் பசுக்களின் வாய், குளம்பு பகுதியில் புண்கள் ஏற்பட்டு கோமாரி நோய் தாக்குதலுக்கு ஆளாகும். இதை தவிர்க்க அனைத்து கிராமங்களிலும் நவ. 6 முதல் 27 வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...