தமிழக செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை -விஜயகாந்த் வலியுறுத்தல்

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை -விஜயகாந்த் வலியுறுத்தல்.

தினத்தந்தி

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தனமாக செயல்படும் தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி, உடனடியாக பால் கொள்முதலை அதிகரிக்கவேண்டும்.

ஆவின் பால் வினியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாகக் களைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராகக்கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்