சென்னை,
சென்னையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடைபெறுவது வழக்கம். அதே சமயம் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சீறிப்பாய்ந்து செல்வதும், அதனால் விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபவதைத் தடுக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை மாலை 6 மணிக்கு மேல் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.