சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் புலிகள் காப்பகத்தின் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் நான்கு புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும் வனப்பரப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் மதிவேந்தன் தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும் புலிகளின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.