தமிழக செய்திகள்

விமானத்தில் இயந்திர கோளாறு; பாதியிலேயே சென்னை திரும்பினார் முதல் அமைச்சர் பழனிசாமி

தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் முதல் அமைச்சர் பழனிசாமி பாதியிலேயே சென்னை திரும்பினார்.

சென்னை,

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார். இதனை முன்னிட்டு அவரை ஆளுநர் பன்வாரிலால், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இதற்காக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. இதனால் முதல் அமைச்சர் காரில் கன்னியாகுமரிக்கு செல்கிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...