தமிழக செய்திகள்

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை - மாநில அமைச்சர்களுக்கான கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டத்தில், தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாநில கல்வி அமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு தெரிவித்த ஆலோசனையை தமிழகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றுவது பற்றி செவ்வாய்க்கிழமைக்குள் முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்